Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாக்: ரூ.45,000 கோடி மதிப்பீட்டில் சூரிய மின் உற்பத்தி திட்டம்

ஆகஸ்டு 16, 2019 11:19

லடாக்: அரசமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து பற்றி ஆகஸ்ட் 8ம் தேதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் சூரிய மின்னாற்றல் திட்டங்கள் லடாக் பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டுள்ள புதிய யூனியன் பிரதேசமான லடாக்கில் ரூபாய் 45,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி திட்டம் அமையவுள்ளது. லே மாவட்ட தலைநகரில் இருந்து 254 கி.மீ தொலைவில் மிகோமா பகுதியில் உள்ள ஹன்லே - ஹல்டோ என்ற கிராமத்தில் 5,000 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போல கார்கில் மாவட்ட தலைநகரில் இருந்து 254 கி.மீ தொலைவில் சன்ஸ்கர் தாலுக்காவில் சுரு பகுதியில் 2,500 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களால் சூரிய மின்தகடுகளை துப்புரவு செய்வது, மின்தடம் மற்றும் மின்மாற்றிகள் பராமரிப்பது போன்ற வேலைகள் உள்ளூர் மக்களுக்கு கிடைத்து அவர்களது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதை அடுத்து 5,000 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை லே நகரில் இருந்து 185 கி.மீ தொலைவில் உள்ள மோரி பீடபூமி பகுதிக்கு மாற்றுமாறு இந்திய சூரிய எரிசக்தி கழகத்தை வன உயிரினங்கள் துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

புதியதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம் லே - மணாலி நெடுஞ்சாலை அருகே அமைந்திருப்பது கருவிகள், ஆட்களை கொண்டு செல்ல வசதி என்றாலும், சாலை செல்லும் இரு கணவாய்களில் குளிர்காலத்தில் 6 மாதங்களுக்கு பனிமூடிக் கிடக்கும். 6 முதல் 8 மாதங்களுக்கு சாலைவழி போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில் சூரிய மின்னுற்பத்தி நிலைய பராமரிப்பு கடினமானதாகி விடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தலைப்புச்செய்திகள்