Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலியல் புகார்: ராணுவ மேஜர் ஜெனரல் டிஸ்மிஸ்

ஆகஸ்டு 16, 2019 01:44

புதுடில்லி: உடன் பணியாற்றிய கேப்டன் அந்தஸ்திலான பெண் அதிகாரியிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக அசாம் ரைபிள்ஸ் பிரிவு மேஜர் ஜெனரலாக இருந்த அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவருக்கு பென்சனும் கிடைக்காது.

கடந்த 2016 ம் ஆண்டு ராணுவத்தின் மேற்கு பிராந்தியத்தில், மேஜர் ஜெனரல் ஆர்எஸ் ஜஸ்வால், மீது கேப்டன் ரேங்கில் உள்ள பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்தார். ஆனால், மேஜர் ஜெனரல் தன் மீதான புகாரை மறுத்தார்.

இந்நிலையில், ஜஸ்வால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் அவரை பணி நீக்கம் செய்ய ராணுவ கோர்ட் பரிந்துரை செய்தது. 

இதனையடுத்து , தற்போது, அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் பணிபுரியும் மேஜர் ஜெனரல் ஜஸ்வாலை பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவில், கடந்த ஜூலை மாதம் ராணுவ தளபதி பிபின் ராவத் கையெழுத்து போட்டார். தொடர்ந்து, இந்த உத்தரவை இன்று உறுதி செய்தார். இதனையடுத்து ஜஸ்வால், பென்சன் கிடைக்காத வகையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 
 

தலைப்புச்செய்திகள்