Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாக இருப்பது குறித்த காணொலி: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட்டார்

ஆகஸ்டு 16, 2019 02:17

சென்னை: இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து ‘உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி’ என்ற தலைப்பிலான இசைக்காணொளி குறுந்தகட்டை சென்னை காவல் ஆணையர் இன்று வெளியிட்டார்.

இணைய பயன்பாட்டின்போது எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக “உஷார் பயன்பாட்டாளர்கள் மற்றும் சகலகலா பூச்சாண்டி” என்ற தலைப்பில் இசை காணொளி இன்று (16.8.2019) வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. முருகப்பா குழுமமும் சென்னை மாநகர காவல் துறையும் இணைந்து தயாரித்துள்ள உசார் யூசர்ஸ், சகலகலா பூச்சண்டி என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வெளியிட முருகப்பா குழும தலைவர் முருகப்பன் பெற்றுக்கொண்டார்.

ஏற்கனவே கடந்த 09.03.2019 அன்று சைபர் கிரைம் மற்றும் வங்கி மோசடி குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெளியிட, குறுந்தகட்டை திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா பெற்றுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நல்ல இணைய பயன்பாட்டாளர்கள் நல்ல குடிமக்கள்” என்ற பெயரில், சென்னை பெருநகர காவல் துறையுடன் இணைந்து முருகப்பா குழுமம் தயாரித்துள்ள இசைக் காணொளியானது சமூக வலைதளத்தையும், இணையதளத்தையும் பொறுப்புடன் கையாள்வது எப்படி என்பது குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இசைக் காணொளியின் பாடலை சுப்பு எழுதி தயாரித்திட, மேட்லி ப்ளூஸ் இசையமைக்க, நாட்டுப்புறப் பாடகர்களான அந்தோணிதாசன் மற்றும் சின்னபொண்ணு ஆகியோர் பாடியுள்ளனர். தற்போது பொதுமக்கள் சந்திக்கும் பெருமளவிலான இணையவழிக் குற்றங்களுக்கு காரணமாக விளங்கும் மூன்று முக்கியமான அம்சங்கள் இந்த காணொளியில் இடம் பெற்றுள்ளன.


 

தலைப்புச்செய்திகள்