Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இப்படியும் வீட்டிற்கு செல்லலாம்: ஊழியருக்கு குவியும் பாராட்டு

ஆகஸ்டு 17, 2019 05:22

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை முடித்துவிட்டு வீடு திரும்ப உபர் டாக்ஸியில் பதிவு செய்ய முயற்சித்தபோது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு 300 ரூபாய் என காட்டியுள்ளது. மிகவும் அதிகமான தொகையாக இருக்கிறதே என யோசித்த இளைஞருக்கு அற்புதமான யோசனைக் கிட்டியுள்ளது.

அருகில் எந்த ஹோட்டல் இருக்கிறது என்று பார்த்ததில் தோசை பந்தி என்ற கடை இருந்துள்ளது. ஸொமடோவில் அந்த கடையில் ஒரு தோசை ஆர்டர் செய்துள்ளார்.

பின் அந்த ஹோட்டலுக்கு வெளியே காத்திருக்க ஆர்டரை எடுக்க ஸொமேட்டோ ஊழியர் வந்திருக்கிறார். பின் அவரிடம் நான் தான் ஆர்டர் செய்தேன். நீங்கள் செல்லவிருக்கும் இடம் என் வீடு தான். என்னையும் உடன் அழைத்துச் சென்று இறக்கிவிடுங்கள் என ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸொமடோ ஊழியருடன் இலவசமாக பயணித்து வீட்டிற்குச் சென்று இறங்கியுள்ளார்.

இறுதியாக அந்த ஊழியரும் ஸ்டார் ரேட்டிங் போடுங்கள் என சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு அந்த ஊழியர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

தலைப்புச்செய்திகள்