Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமாவளவன் வேண்டுகோள்

ஆகஸ்டு 17, 2019 12:28

சென்னை: நாடு முழுவதும் இன்று முதல் பனை விதைகளை விதைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

திருமாவளவன் பிறந்த நாள் விழா சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இன்று முதல் பெரியார் பிறந்த நாளாகிய அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இரண்டாவதாக, மீண்டும் பனைவிதைகள் விதைக்கும் திட்டத்தைத் தீவிரப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இன்று முதல் நாடு முழுவதும் பனைவிதைகள் விதைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதற்கு காலக்கெடு ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்