Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையை தொடரலாம்: ஐகோர்ட்டு

பிப்ரவரி 22, 2019 02:33

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. ஆணையத்தில் ஆஜராகுமாறு பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 
 
இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.  

இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அப்பலோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது. 

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை தொடரலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.  
 

தலைப்புச்செய்திகள்