Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரைக்கால்: தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

ஆகஸ்டு 18, 2019 05:36

காரைக்கால்: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களில் பிளாஸ்டிக் பைகள் உள்ளன. தடை உத்தரவை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பல கடைகளில் பிளாஸ்டிக் பைகளை விற்கவோ, வழங்கவோ முன்வரவில்லை.

ஆனால் சிலர் இன்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியும், விற்றும் வருகின்றனர். அது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில், காரைக்கால் நகராட்சிக்குட்பட்ட மாதாகோவில் வீதியில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில், மாவட்ட துணை ஆட்சியர் பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள், அறிவியல் மற்றம் சுற்றுச்சூழல் துறையினர் நேற்று அதிரடியாக சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 2 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறியதாவது:-

அரசு அறிவிப்புபடி பிளாஸ்டிக் பை, கப் உள்ளிட்ட பொருட்களை விற்கக்கூடாது. முதல் முறை சோதனையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அடுத்த முறை சோதனையின்போது பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நேற்று ஒரு நாளில் மட்டும் 2 டன் அளவில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அதிரடி சோதனைகள் தொடரும்.

மேலும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கைவிட்டால் பிளாஸ்டிக் பைகள் விற்பனை தானாக ஒழிந்துவிடும். எனவே பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்