Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ளநோட்டு புழக்கம் : சிக்கிய அதிகாரி

ஆகஸ்டு 18, 2019 05:54

நாகர்கோவில் : கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கேரளாவை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் உட்பட மூன்று பேர் போலீசாரிடம் சிக்கினர்.நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதி தியேட்டரில் ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார்.

இந்த நோட்டில் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த ரூபாய் நோட்டு கொடுத்தவரை விசாரித்த போது அது கள்ள நோட்டு என்பது தெரிந்தது. அவரை விசாரித்ததில், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. 

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோடு கேசரி தெருவை சேர்ந்தவர் தினகரன் 43. இவர் கொச்சியில் மத்திய அரசின் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மகளிர் கிறிஸ்தவ கல்லுாரி ரோட்டில் உள்ள அவரது கடையில் உள்ள கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தில் கள்ள நோட்டு தயாரித்தது தெரிய வந்தது. நோட்டை புழக்கத்தில் விட்ட பள்ளிவிளையை சேர்ந்த ரமேஷ் 43, உதவியாக இருந்த ஜோசப் மனோவா 40, தினகரன் ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இவர்களிடம் இருந்த நான்கு 2000 ரூபாய் நோட்டு, ஒரு 200 ரூபாய் நோட்டு, ஜெராக்ஸ் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்