Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100மீட்டர் தூரத்தை 11 விநாடிகளில் ஓடி முடித்த இளைஞர் : பிரமித்துப் போன மத்திய அமைச்சர்

ஆகஸ்டு 18, 2019 08:29

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் சிங் என்ற அதிவேக வீரர் 100மீ தூரத்தை 11 விநாடிகளில் ஓடி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான் இதனை ட்விட்டரில் வீடியோவாகப் பதிவிட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அந்தச் சிறுவனை தன்னிடம் அழைத்து வருமாறு கூறியுள்ளார். வெறுங்காலில் ஓடிய ராமேஸ்வர் சிங் 100 மீ தூரத்தை 11 விநாடிகளில் கடந்தது கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை பற்றி விவரமாகத் தெரியவில்லை, ஆனால் கிரண் ரிஜிஜு பிரமித்துப் போய், “இந்தப் பையனை எப்படியாவது என்னிடம் அழைத்து வாருங்கள். அந்தப் பையனை நான் ஏதாவது தடகள பயிற்சி முகாமில் சேர்த்து விடுகிறேன். சிவ்ராஜ் சவுகான், தன் ட்விட்டரில் அந்த புயல் இளைஞர் பற்றி பதிவிட்ட போது, “இந்தியா திறமை மிக்க தனிநபர்களைக் கொண்டுள்ளது. இவர்களுக்கு நல்ல வாய்ப்பையும் நல்ல அரங்கையும் உருவாக்கிக் கொடுத்தால் இவர்கள் வரலாறு படைப்பார்கள்” என்று ராமேஸ்வர் சிங் ஓட்டத்தை வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

விரைவில் இவர் எஸ்.ஏ.ஐ போபாலில் இணைந்து பயிற்சி பெறவுள்ளதாகவும் விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராமேஸ்வர் சிங்கிற்கு முழு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்