Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முஸ்லிம்கள் பற்றி தவறான கருத்து: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்

ஆகஸ்டு 19, 2019 05:32

ஸ்ரீவில்லிப்புத்தூர்: முஸ்லிம்கள் பற்றி தவறாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் அத்திவரதர் சம்பந்தமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கடந்த மாதம் 27-ம் தேதி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்பொழுது முந்தைய காலத்தில் திருடர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பயந்துதான் அத்தி வரதரை குளத்திற்குள் பாதுகாப்பாக வைத்தனர் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மத உணர்வை தூண்டும்படி ஜீயர் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் என்பவர் முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்