Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?

ஆகஸ்டு 19, 2019 06:48

மும்பை: கடந்த வாரம் நடைபெற்ற ரிலையன்ஸ் ஜியோ லிமிடெட் நிறுவனத்தின், 42வது வருடாந்திர பொதுக் கூட்டம் மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜியோ ஜிகாஃபைபர் பற்றிய அறிவிப்புடன் முதல் நாள் முத்தலாக் ஷோ, இலவச 4K டிவி மற்றும் இலவச 4K செட்டாப் பாக்ஸ் போன்ற பல புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய Reliance Jio GigaFiber broadband ஜியோ ஜிகாஃபைபர் சேவை மக்களின் பயன்பாட்டிற்குச் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மாதாந்திர சந்தாதாரர் திட்டம் துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும் என்று முகேஷ் அம்பானி நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பயனர்களுக்கு இலவசமாக லேண்ட் லைன் கனெக்ஷன் மற்றும் செப்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் நீண்ட நாள் திட்டமான, வருடாந்திர திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இலவச 4K டிவி மற்றும் இலவச 4K செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஜியோ ஜிகாஃபைபர் சேவை செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில்பயன்பாட்டிற்கு வருகிறது, அதற்கு முன்னால் முன்பதிவு செய்ய விரும்பும் பயனர்கள் இந்த முறைப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Jio GigaFiber Online Registration என்ற வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.முன்பதிவு செய்ய மூன்று கட்ட பதிவுகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

# முதல் நிலை பிரிவில், உங்கள் வீட்டின் முகவரி அல்லது உங்கள் அலுவலகத்தின் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்.
# இரண்டாம் நிலை பிரிவின் கீழ் உங்கள் பெயர், தொலைப்பேசி எண் மற்றும் உங்கள் ஈமெயில் ஐடி விபரங்களைச் சரியாக என்டர் செய்ய வேண்டும்.உங்கள் தகவல்களை என்டர் செய்த பின் Generate OTP கிளிக் செய்யவும்.உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணைச் சரியாக என்டர் செய்யவும். அதற்குப் பின் நீங்கள் RWA/Society Developer Township போன்ற எந்த மாதிரியான குடியிருப்பில் உள்ளீர்கள் என்ற விபரத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
# மூன்றாம் நிலை பிரிவின் கீழ், மீண்டும் ஒரு முறை உங்களின் முகவரி, பின் கோடு எண் விபரங்களை என்டர் செய்து ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனிற்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

இதைச் சரியாகச் செய்தால் ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அழைத்துப் பேசுவார். உங்கள் தகவலைச் சரி செய்தபின், ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான தகவல்களை உங்களுடன் பகிரப்படும்.

உங்கள் அனுமதியுடன் உங்கள் வீட்டிற்கே ஜியோ அதிகாரிகள் வந்து ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான இன்ஸ்டாலேஷனை செய்து கொடுப்பார்கள்.

தலைப்புச்செய்திகள்