Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய ஆயுதப்படை: ஓய்வு வயது 60 ஆக உயர்வு

ஆகஸ்டு 20, 2019 03:42

புதுடில்லி: மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் அனைவருக்கும், ஓய்வு வயது, 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மத்திய தொழிலக பாதுகாப்புப்படையினர், அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு ஓய்வு வயது, 60 ஆக உள்ளது. 

மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லை பாதுகாப்புப்படை, இந்தோ - திபெத்திய எல்லை போலீஸ், சாஷ்டிரா சீபா பல் ஆகிய படைப்பிரிவுகளில், பணியாற்றுவோர், இதுவரை, 57 வயதில் பணி ஓய்வு பெற்றனர். இது தொடர்பான வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அனைத்து, மத்திய பாதுகாப்பு படைப்பிரிவினருக்கும் ஓய்வு வயது, 60 ஆக அதிகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்