Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முக்கிய கட்டத்தை துல்லியமாக எட்டிய சந்திரயான்- 2

ஆகஸ்டு 20, 2019 08:47

பெங்களூரு: நிலவை ஆராய்வதற்காக கடந்த மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை, நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இதனையடுத்து, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 விண்கலம் ஒவ்வொரு கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறினார். 

தாய் வீட்டில் இருந்து புறப்பட்ட மணப்பெண், புகுந்த வீடு செல்வதைப்போல் சந்திரயான் 2-ன் பயணம் உள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

புவி சுற்றுவட்டப் பாதையில் இருந்து கடந்த 14ம் தேதி விடுவிக்கப்பட்ட நிகழ்வும், தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்துள்ள நிகழ்வும் வெற்றிகரமாக அமைந்துள்ளதாக சிவன் கூறினார். இன்று காலை சரியாக 9.02 மணி அளவில், சந்திரயான் 2, நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்ததாகத் தெரிவித்த அவர், நிலவில் இருந்து 18,000 கி.மீ. உயரத்தில் சந்திரயான் 2 சுற்றி வருவதாகக் குறிப்பிட்டார். 

தற்போது, விநாடிக்கு 10.3 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் சந்திரயான் 2, திட்டமிட்டபடி, நிலவில் தரையிறங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்