Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடலூர் அருகே லாவகமாக நகைகளை திருடும் 2 பெண்கள்: சிசிடிவி காட்சி வெளியானது

ஆகஸ்டு 21, 2019 04:33

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். இவர் பண்ருட்டி ராஜாஜி சாலையில் நகை கடை வைத்துள்ளார். இந்த நகைக்கடைக்கு வந்த 2 பெண்கள், நகைகள் வாங்குவது போலவே நடித்து, ஒவ்வொரு மாடலாக எடுத்துக்காட்டச் சொல்கின்றனர். அப்போது கடை ஊழியர்கள் மற்றொரு டிசைனை எடுக்கும் நேரம் பார்த்து, லாவகமாக தங்க நகையை எடுத்துவிட்டு, தங்களது கையில் உள்ள கவரிங் நகைகளை மாற்றி வைக்கின்றனர்.

இது பற்றி தேவநாதன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு தனிப்படை கொண்ட போலீசார் திருடுபோன நகை கடையில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இந்தக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய போலீசார், செல்வி மற்றும் ரத்னா ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நகை திருடியது தெரிய வந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தலைப்புச்செய்திகள்