Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபோதையில் பள்ளியிலேயே உறங்கிய ஆசிரியர்

ஆகஸ்டு 21, 2019 04:49

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலத்தில், போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் வகுப்பறைகள் கோயில் போன்றது எனக் கூறும் ஆசிரியர்களுக்கு மத்தியில் வகுப்பறையை மதுபான குடித்துவிட்டு ஓய்வெடுக்கும் அறையாக மாற்றியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் பீட்டுல் பகுதியில் உள்ள பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வரும் நிலையில், ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு வரும்போதே, மது போதையில் வந்துள்ளார். இதனை கண்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். என்ன செய்வதென்று அரியாத மாணவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில், அவர் வகுப்பறையிலேயே தூங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தலைப்புச்செய்திகள்