Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் நாளை திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

ஆகஸ்டு 21, 2019 05:43

சென்னை: காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் நாளை (ஆகஸ்ட் 22) திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி 2-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் நாடு மிகவும் ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அரசியல் சட்டத்தை மீறி, காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வீட்டுக் காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி வரும் 22-ம் தேதி (நாளை) டெல்லியில் திமுக நடத்தும் ஆர்ப் பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களும் பங்கேற்பார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாக்க நடைபெறும் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதுமே ஆதரவளிக்கும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்