Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமாவளவன் பற்றி அவதூறு பரப்பியவர் கைது

ஆகஸ்டு 21, 2019 07:21

கிருஷ்ணகிரி:  ஊத்தங்கரையை அடுத்த சாசனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (வயது30). ஊத்தங்கரையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து செய்தி பரவுவதை கண்டு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் திருமாவளவனை பற்றி ஆபாசமான வார்த்தைகளால் திட்டி அவதூறு பரப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து ஊத்தங்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் பிரமுகர் சரவணன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி.யை பற்றி சாமிநாதன் என்பவர் ஆபாசமாக திட்டி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பதிவிட்ட சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த புகார் மனுவில் கூறினார்.

போலீசார் சாமிநாதனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.


 

தலைப்புச்செய்திகள்