Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மிகவும் மோசமான நிதி நெருக்கடி: நிடி ஆயோக்

ஆகஸ்டு 23, 2019 05:13

புதுடில்லி : கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நிடி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சரிவு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. அரசு ஏதாவது செய்தாக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும

யாரும் யாரையும் நம்ப முடியாத நிலை உள்ளது. இதற்கு 2 வழிகள் தான் உள்ளது. ஒன்று, ஏதாவது நடவடிக்கை எடுத்து சகஜ நிலை திரும்ப செய்ய வேண்டும். இரண்டாவது, சில துறைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றார்.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக உள்ளது. மார்ச் 31 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5.7 சதவீதம் சரிந்துள்ளது. குறைவான முதலீடுகள், குறைவான உற்பத்தி ஆகியன இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்