Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள்: 9 மாதங்களில் காணாத அளவுக்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ஆகஸ்டு 23, 2019 06:20

மும்பை: இந்திய பங்கு சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 10,658 ஆகவும், மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 293 புள்ளிகள் சரிந்து 36,173 ஆக வர்த்தமாகிறது. உலக அளவில் பொருளாதார நிலை தேக்கம், ஆசிய பங்குச்சந்தைகளில் பலவீனமான வர்த்தகம் போன்றவையால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்தனர். 

இதனால், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி) ஆகியவற்றில் விறுவிறுப்பு காரணப்படவில்லை. வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 587  புள்ளிகள் குறைந்து மொத்தம் 36,472.93 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோல், நிப்டி 177.35 புள்ளிகள் சரிந்து மொத்தம் 10,741.35 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நேற்று 1,433 பங்குகள் விலை குறைந்தன. 

ஆட்டோமொபைல் தொழிலில் வாகனங்கள் விற்பனை குறைவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு மற்றும் பல்வேறு தொழில்களில் தேக்க நிலை போன்றவை பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊக்கம் அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வேதாந்தா, எஸ் பாங்க், பஜாஜ் பைனான்ஸ், இன்டுஸ்லாண்ட் பாங்க், ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், சன் பார்மா, எச்டிஎப்சி பாங்க், எஸ்பிஐ ஆகிய பங்குகளின் விலை 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசு சரிந்து ரூ.72.03 ஆக உள்ளது. அந்நியசெலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தலைப்புச்செய்திகள்