Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயில் நிலைய நடைமேடையிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம்: பெண் காவலர்கள், செவிலியர்கள் தக்க நேரத்தில் உதவி

ஆகஸ்டு 23, 2019 06:42

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் நடைமேடையிலே கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஸ்ரீவைகுண்டத்தில் தனது கணவர் சுடலையுடன் வசித்து வரும் மாரியம்மாள், கடையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த உதவி ஆய்வாளர் ஜூலியட் தலைமையில் பெண் காவலர்கள் மாரியம்மாளுக்கு முதலுதவி அளித்தனர். இதையடுத்து 108 ஆம்புலசில் மாரியம்மாளை கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவருக்கு தாங்க முடியாத பிரசவ வலி ஏற்பட்டதால் செய்வதறியாது பெண் காவலர்கள் தவித்தனர்.

அப்போது அவருக்கு ரயில் நிலையத்திலேயே பிரசவம் பார்த்தனர். அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தகுந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு முதலுதவி அளித்த பெண் காவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ரயிலில் பயணிக்க வந்த பயணிகள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர். தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக காவலர்கள் தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்