Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீதிபதி தேர்வில் வென்ற நீதிமன்ற கார் டிரைவர் மகன்

ஆகஸ்டு 24, 2019 07:01

இந்தூர்: மாவட்ட நீதிமன்றத்தில் ஓட்டுநராகப் பணிபுரிபவரின் மகன் சிவில் ஜட்ஜ் பதவிக்கான தேர்வை எழுதி சிறப்பான சாதனை படைத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஓட்டுநராகப் பணியாற்றும் கோவர்த்தன்லால் பஜாத்தின் தந்தையும் இதே நீதிமன்றத்தில் பணிபுரிந்தவர்தான். ஆனால் இவர்கள் இருவருமே நீதிபதிகளோ அதிகாரிகளோ அல்ல. ஒரு சாதாரண கடைநிலை ஊழியர் பணியிடத்தில்தான் அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது. ஆனால் மூன்றாவது தலைமுறையின் லட்சியங்கள் முற்றிலும் வேறாக இருக்கிறது என்பதற்கு சேதன் பஜாத் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார்.

ஆனால் சேதன் பஜாத் தான் நீதிபதியாக இன்று தேர்வில் வெற்றிபெறுவதற்கான இலக்கை ஏற்படுத்திக்கொள்ள தாத்தாவும் தந்தையுமே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''என் தந்தை மற்றும் தாத்தா கோர்ட்டில் பணிபுரிவது எனக்கு ஒரு இலக்கை நிர்ணயிக்க உதவியது. நான் ஒரு நீதிபதியாக வேண்டுமென்பது எனக்குள் எப்போதும் இருக்கும் ஒரு லட்சியத்தை அவர்கள் மூலமாகவே நான் பெற்றேன். நீதிமன்றத்துடன் தந்தைக்கு இருந்த தொடர்புமூலம்தான் மக்களுக்கு சேவை செய்ய நீதித்துறை மிகச்சிறந்த இடம் என்று எனக்குத் தோன்றியது.

நான் எனது கடமைக்கு நேர்மையாக நடந்துகொள்வேன். சிறந்த முறையில் நீதியை வழங்க முயற்சிப்பேன். சமூகத்தில் ஒரு முன்னுதாரணமாக இருப்பேன்.''

மகன் நீதிபதியானது குறித்து சேதனின் தாயார் பேசுகையில், ''என் மகன் நீதிபதியானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது'' என்றார்.

தலைப்புச்செய்திகள்