Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்

ஆகஸ்டு 24, 2019 07:25

டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று, சனிக்கிழமை, மதியம் 12.07 மணியளவில், மரணமடைந்தார் என அந்த மருத்துவமனையின் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

1999 முதல் 2004 வரை அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சட்டம் மற்றும் நீதி, தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி, 2014 தேர்தலில் நரேந்திர மோதி பிரதமரானபின் நிதி அமைச்சராகவும், கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைசகராகவும் இருந்தார். அதே ஆட்சிக் காலத்தின் முதல் சில மாதங்கள் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்தார்.

2018இல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஜெட்லி, உடல்நிலை காரணமாக புதிய அரசில் பொறுப்பு எதையும் தமக்கு வழங்க வேண்டாம் என்று 2019 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1952ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி, ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யா பரிஷத் மூலம் மாணவர் அரசியலுக்கு வந்தார்.

அருண் ஜெட்லி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் ஆவார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 2009 முதல் 2014 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
 

தலைப்புச்செய்திகள்