Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலியல் பாதிரியாரை எதிர்த்ததால் கன்னியாஸ்திரிக்கு நோட்டீஸ்

ஆகஸ்டு 24, 2019 02:27

கொச்சி: கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா, கான்வென்டில் சிறை வைக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதற்காக மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், புகார் அளித்தது குறித்து விளக்கம் கேட்டும், பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பஞ்சாப் ஜலந்தரை சேர்ந்த , பிஷப் பிராங்கோ மூலக்கல் என்பவர் தனக்கு கீழ் பணியாற்றிய கேரள கன்னியாஸ்திரி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி லுாசி என்ற கன்னியாஸ்திரி, மேலும் சில கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். 

லுாசியின் வாழ்க்கை முறை குறித்து கூறப்பட்ட புகார் அடிப்படையில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி, ரோமன் கத்தோலிக்க தேவாலாயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் எப்.சி.சி. எனப்படும் ‛பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட்' சபையிலிருந்து, நீக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து லூசி, வாடிகனில் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், லூசி, கடந்த திங்கட்கிழமை(ஆக.,19) தான் தங்கியிருந்த கான்வென்டில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டதாகவும், போலீசார் வந்து தான் கதவை திறந்து விட வேண்டியிருந்ததாகவும், வெல்லமுண்டா போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனையடுத்து, இந்த புகாரை அளித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி லூசி கலப்புராவுக்கு, எப்சிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், புகார் அளித்ததற்காக மன்னிப்பு கேட்கும்படியும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.


 

தலைப்புச்செய்திகள்