Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம்

ஆகஸ்டு 25, 2019 12:44

புதுடெல்லி; உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, நேற்று நண்பகல் உயிரிழந்தார். இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லியின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்குக்காக டெல்லி நிகாம்போத் காட் பகுதிக்கு ராணுவ வாகனத்தில் அருண் ஜெட்லியின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். நிகாம் போத் காட் பகுதியில் உள்ள தகன மேடைக்கு பாதுகாப்பு படை வீரர்கள் அருண் ஜெட்லியின் உடலை எடுத்துச் சென்றனர். அப்போது துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீர் விட்டு அழுதார்.

தொடர்ந்து முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது

தலைப்புச்செய்திகள்