Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கலைஞர் கருணாநிதிக்கு 30 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டும் கிராம மக்கள்

ஆகஸ்டு 26, 2019 03:16

நாமக்கல்: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.கவின் தலைவருமான கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி காலமானார். அவர் இறந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகிலுள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்கு அந்த கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த கிராம மக்கள், ‘கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் 18% சதவீத இடஒதுக்கீட்டில் 3% அருந்ததியினர் சமூக மக்களுக்கு உள்இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோயில் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். 30 லட்ச ரூபாய் செலவில் கோயில் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கட்சி பேதமின்றி கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்