Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளிக்கு முன்பு பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும்: பிரதமர் மோடி நம்பிக்கை

ஆகஸ்டு 26, 2019 03:21

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. அப்போது கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தை குறிப்பிட்டு பேசிய அவர், கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து நிகழ்கால பிரச்னைகளுக்கான தீர்வை அனைவரும் பெறமுடியும் என்றார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாட திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் பிறப்பு தனிமனிதனின் பிறப்பல்ல. ஒரு சரித்திரத்தின் பிறப்பு என்றும் அவர் கூறினார். 

அவரது பிறந்த நாளை கொண்டாட ஒவ்வொருவரும் கரம்கோர்த்து முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அன்றைய தினத்தில் பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான மாபெரும் இயக்கத்தை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார். பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தில் ஒவ்வொருவரும் கரம் கோர்க்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தீபாவளிக்கு முன்பாக பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழித்திட முடியும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்