Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

1,395 லி., கலப்பட எண்ணெய் பறிமுதல்

ஆகஸ்டு 27, 2019 04:00

கோவை : அன்னுார் அருகே, 1,395 லி., கலப்பட எண்ணெய், உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் தமிழ்செல்வன், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சொல்வல்லன், ஆரிச்சாமி ஆகியோர், அன்னுார், ஓதிமலை சாலை, கரியக்கவுண்டனுார் அருகேவுள்ள வீட்டில் சோதனை நடத்தினர். 

இதில், விற்பனைக்காக, 1,395 லி., கலப்பட கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் இருப்பது தெரிந்தது. பறிமுதல் செய்த அதிகாரிகள், தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்ட, பொன்னுசாமி, 60 இவரது மகன் அசோக், 36 ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர். 

மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது: அன்னுார், சிறுமுகை, குமரன்குன்று சுற்றுவட்டார கிராமங்களில், இவர்கள், கலப்பட எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தொடர் கண்காணிப்புக்கு பின்பே, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலப்பட எண்ணெய், 1.5 லட்சம் மதிப்புடையது. மாதிரியை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றின் முடிவை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட எண்ணெய் விற்பனை செய்பவர்களுக்கு, ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்