Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்ற பேராசிரியர் கைது

ஆகஸ்டு 27, 2019 04:11

திருச்சி:திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து வங்கி கடன் பெற்ற தனியார் கல்லுாரி பேராசிரியர் பால்ராஜ் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். கல்லுாரி பேராசிரியர் பால்ராஜ், அவரது மனைவி அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியை பிரேமா ஷீலா. இவர்களது மகன் வித்யாதரன் மற்றும் இவரது நண்பர்கள் சுந்தரவதனம், பிரகாஷ். நில ஆவணங்கள் மூலம் இவர்களது நான்குபெயர்களையும் சேர்த்து பால்ராஜ் வங்கியில் ரூ.2.67 கோடி கடன் பெற்றார்.

இந்த கடனில் ரூ. 17 லட்சம் மீதி இருந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற வங்கி மேலாளர், பால்ராஜ் கொடுத்த நில ஆவணங்களை ஆய்வு செய்தார். இதில் வீடு, நிலம் இல்லாமல் போலி ஆவணம் தயாரித்து கடன் பெற்றது தெரிந்தது. இது குறித்து திருச்சி நகர் குற்றப்பிரிவில் மேலாளர் புகார் கொடுத்தார். பால்ராஜ், பிரேமா ஷீலா, வித்யாதரன், சுந்தரவதனம், பிரகாஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் பால்ராஜ், பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். 
 

தலைப்புச்செய்திகள்