Saturday, 21st September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும்: பெண்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்

ஆகஸ்டு 30, 2019 04:25

குஜராத்: குஜராத்தின் ஆமதாபாத் மாநகராட்சி சார்பில் நடந்த மரம் நடுவிழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை உறுதியாக செயல்படுத்தி வருகிறார். ஆனால் இந்த நோக்கத்துக்கு மிகப்பெரும் தடையாக பிளாஸ்டிக் இருக்கிறது. இதனால் தான் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு சுதந்திர தின உரையில் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார்’ என்று தெரிவித்தார்.

பெண்கள் பொருட்கள் வாங்குவதற்காக கடைகளுக்கு செல்லும்போது பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய அமித்ஷா, அதற்கு பதிலாக துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும் எனவும், இது 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் என்றும் கூறினார். துணி பைகளை எடுத்து செல்வது பழைய காலத்து பாணி என கருதினாலும், இதுதான் பூமியை பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து காப்பாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

தலைப்புச்செய்திகள்