Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜகவில் 18 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக ஜே.பி. நட்டா தகவல்!

ஆகஸ்டு 30, 2019 04:50

புதுடில்லி: பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் தற்போது பாஜகவில் 18 பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும் அதன் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 

பாஜக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கையில் மும்முரம் காட்டி வருகிறது. அதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட செயல்தலைவர் ஜேபி நட்டா பணிகளைக் கவனித்து வருகிறார். 

பாஜகவின் நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாளான ஜூலை 6ஆம் தேதி வாரணாசியில் நடைபெற்ற விழாவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது உறுப்பினர் சேர்க்கை இலக்காக 2.2 கோடி நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நட்டா, புதிதாக 7 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி நடந்துவருகிறது. மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் எங்களுக்கு மிக நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இப்போது மொத்தமாக பாஜகவில் 18 கோடி பேர் உறுப்பினராக உள்ளனர். பாஜக உறுப்பினர் எண்ணிக்கையை விட அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடு உலகிலேயே 7 மட்டும்தான்’எனக் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்