Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அசாமில் இன்று தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல்வெளியீடு

ஆகஸ்டு 31, 2019 04:05

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 

இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

வரைவு பட்டியலில் விடுபட்டவர்களில், லட்சக்கணக்கானோர் மறு மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர். இருந்தும் விண்ணப்பித்த 3.29 கோடி பேரில் 2.9 கோடி பேரின் பெயர்கள் மட்டுமே வரைவு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கூடுதல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. விடுபட்ட பலரும் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்ககோரி மறு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். 

 இந்நிலையில், அசாமில் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இதையடுத்து, அசாம் மாநிலத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தலைப்புச்செய்திகள்