Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத 69490 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

ஆகஸ்டு 31, 2019 09:41

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த செயல்பாடுகளை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், மற்ற இடங்களில்  மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

“சென்னையில் 1,62,284 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது. இதுவரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காக  69490 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் சிறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டிய 38507 கட்டிடங்களில், ஒரு வாரத்திற்குள் மழைநீர் சேகரிப்பை அமைத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் ஆணையர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்