Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று(ஆக., 20) விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்பட்டன. பொது மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர்.

ஆகஸ்டு 31, 2019 10:50

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு, 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.மாநிலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க, மாநில நிர்வாகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

சில நாட்களாக, இந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு, மக்கள், இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். காஷ்மீரில், வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் சிறப்பு தொழுகையின் போது, பாதுகாப்பு படையினர் மீது, பிரிவினைவாதிகள், கல்வீச்சு தாக்குதல்களில் ஈடுபடுவது வழக்கம். இதையடுத்து, வெள்ளிக் கிழமையான நேற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஆக.,31) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதுடன், மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அங்கு, பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சூழ்நிலை அமைதியாக உள்ளதாகவும், வன்முறை ஏதும் பாதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 27 வது நாளாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்