Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பால் விலை உயர்வு: உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

ஆகஸ்டு 31, 2019 01:13

சென்னை: ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வருகிறது. ஆவின் பால் விலையானது கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாயும், எருமை பாலின் விலை 6 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதால் ஆவின் பாலின் விற்பனை விலையை தலா 6 ரூபாய் என 1 லிட்டருக்கு உயர்த்துவதாகவும், ஆவின் பால் நிறுவனம் வழங்கி  வரும் மூன்று வகையான பால் வகையான நீலம், பச்சை, பிரவுன் ஆகிய 3 வகையான பால் வகைகளுக்கும் தலா 6 ரூபாய் உயர்த்துவதாக தமிழக அரசும், ஆவின் நிறுவனமும் அறிவித்தது. 

இந்த விலை உயர்வுக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் 4 ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தியது நியாமாமாக இருந்தாலும், ஆவின் பாலின் விற்பனை விலையை ஒரே கட்டமாக 6 ரூபாயாக உயர்த்தியதால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் கிழமை நீதிபதிகள் சத்தியநாராயணன் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.


 

தலைப்புச்செய்திகள்