Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அர்ஜூனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரன் சென்னை திரும்பினார்

ஆகஸ்டு 31, 2019 01:29

சென்னை: 20 ஆண்டுகளுக்கு பிறகு பாடி பில்டர் துறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் சென்னை கேகே நகரைச்சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரனுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருது வழங்கினார்.

அதன்பிறகு இன்று காலை பாஸ்கரன் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு விளையாட்டு வீரர்கள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 ஆண்டுகளுக்கு பின்பு பாடிபில்டர் துறைக்கு விருது வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னை போன்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

மேலும் மத்திய அரசின் "Fit India" திட்டத்தில் தமிழகமும் பங்கெடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்