Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மறைந்த எம்.பியின் ரயில்வே பாஸை பயன்படுத்திய மகன்: போலீஸாரிடம் சிக்கிய பரிதாபம்

ஆகஸ்டு 31, 2019 02:09

சென்னை: மறைந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜின் ரயில்வே பாஸை பயன்படுத்தி பயணம் செய்த அவரது மகன் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

தி.மு.க முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி, முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்தவர் செல்வராஜ். கடந்த மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் அவருக்கு ரயில்வே சலுகை அட்டை வழங்கப்பட்டு இருந்தது.

அதனைப் பயன்படுத்தி அவரும் அவரது மனைவி இருவரும் ஆயுட்காலம் முழுவதும் முதல் வகுப்பில் கட்டணமின்றி பயணம் செய்ய முடியும். செல்வராஜ் காலமான நிலையில், அவரது மனைவிக்கு மட்டும் இந்த சலுகை உள்ளது. இந்தநிலையில் பெங்களூரு மெயில் ரயிலில், செல்வராஜின் ரயில்வே பாஸை பயன்படுத்தி மகன் கலைராஜன் பயணித்துள்ளார்.

அப்பொழுது காட்பாடி டு பெரம்பூர் இடையில் கலைராஜ் பாஸை சோதித்த ரயில்வே அதிகாரிகள் அவர், மறைந்த அவருடைய தந்தையின் பாசை பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரை கைதுசெய்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சொந்த ஜாமினில் அவரை விடுதலை செய்தனர்.

 

தலைப்புச்செய்திகள்