Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா கவர்னரானார்

செப்டம்பர் 01, 2019 06:15

புதுடில்லி: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில் ; 

# தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்திரராஜன்
# மஹாராஷ்டிரா கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி
$ ஹிமாச்சல் கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா
# கேரள கவர்னராக ஆரிப் முகமது கான் 
# ஹிமாச்சல் கவர்னராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளத

கவர்னராக நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கவர்னர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவராக எனது பதவிக்காலம், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்