Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் தனியார் மயமாக்கமா?

செப்டம்பர் 01, 2019 07:26

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக பணிகள் இன்று முதல் தனியார் மயமாகும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை மெட்ரோ நிர்வாகம் பெரும்பாலான பணிகளில் தனியார் ஊழியர்கள் இருந்து வந்தாலும் மெட்ரோ ரயில் நிர்வாக கட்டுப்பாடு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில் ஓட்டுநர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் அரசு ஊழியர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரயில் ஓட்டுனர், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிலைய கட்டுப்பாட்டு பணியாளர்கள், பராமரிப்பு பணியாளர்கள், டிக்கெட் வழங்குபவர் உள்ளிட்ட பணிகளை செய்யும் ஊழியர்கள் இன்று முதல் தனியார் வசம் செல்கிறது. இந்த பணியாளர்கள் ஒப்பந்த முறைக்கு தனியாருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், பல தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் சகஜமாக நடக்கும் விஷயம் இது என்றும், இதனை வைத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியார் மயமானதாக வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்