Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் 3 அடுக்கு போலீசார் பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி திருவிழா

செப்டம்பர் 02, 2019 07:09

கோவை: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் குறிப்பாக கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தீவிரவாதிகள் கோவையில் தங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டது.  இதனால் கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள  விநாயகர் கோவில்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..  இதன்படி கோவையில் ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் முந்தி விநாயகர் கோவில், மருதமலை, கோனியம்மன் திருத்தலங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்