Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

செப்டம்பர் 03, 2019 08:36

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த  நாயக்கன் பேட்டையில் புதிதாக அரசு மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, அங்கு அமைந்துள்ள தனியார் பள்ளி மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் பார்த்தசாரதியை நேரில் சந்தித்து மாணவிகள் எங்கள் ஸ்கூல் அருகில் மதுபான கடை அமைக்க கூடாது என மனு கொடுத்தனர். 

இதை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர்  பரிசீலனை செய்வதாக மாணவியரிடம் மற்றும் ஆசிரியரிடம் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து மாணவிகள் கலைந்து சென்றனர்.

தலைப்புச்செய்திகள்