Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விதிமீறலில் ஈடுபடும் போலீஸாருக்கு இரட்டிப்பு அபராதம்

செப்டம்பர் 06, 2019 04:39

சென்னை: போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் போலீஸாருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் எச்சரித்துள்ளார்.

விபத்துகளையும், விபத்து உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில் போக்குவரத்து போலீ ஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

விரைவில் தமிழகம் முழுவதும் விரை வில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்கான பணியில் போக்குவரத்து போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீஸா ருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாலை விதி மீறல்களில் போலீஸார் யாரேனும் ஈடுபடுகிறார் களா? என தீவிரமாக கண்காணிக்குமாறு போக்குவரத்து காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் கண்காணிக்கவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் இது தொடர்பான சுற்றறிக்கையையும் அவர் அனுப் பியுள்ளார். சாலை விதிகளை மதிப்பதில் போலீஸார் பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கூடுதல் காவல் ஆணையர் அருண் போலீ ஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்