Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகள்

பிப்ரவரி 25, 2019 06:29

திருவண்ணாமலை: தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சந்திப்பில் அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. 


விழாவுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், செஞ்சி வி.ஏழுமலை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வரவேற்றார். 

விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரமாண்ட கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது. 

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று ஜெயலலிதா உருவ சிலையும், எம்.ஜி.ஆர். உருவ சிலையும் திறந்து வைக்க கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். அதன்பேரில் இங்கு திறப்பு விழா நடைபெற்றது. 

 

தலைப்புச்செய்திகள்