Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இஸ்ரோ தனது அயராத உழைப்பை கொடுத்துள்ளதற்காக நான் வாழ்த்துகிறேன்: ராகுல் காந்தி

செப்டம்பர் 07, 2019 07:01

புதுடில்லி: சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தரைதளத்தைத் தொடும்போதே தனது தொடர்பை  இழந்தது. சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நிலவை நோக்கி பயணித்த லேண்டர், சுமார் 2.1 கி.மீ. தொலைவில் இருந்த போது லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் வழங்கும் வகையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்நிலையில் தற்போது இஸ்ரோவின் இந்த முயற்சியை குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “சந்திரயான் 2 விண்கலத்திற்காக இஸ்ரோ தனது அயராத உழைப்பை கொடுத்துள்ளதற்காக நான் வாழ்த்துகிறேன். உங்களது அர்ப்பணிப்பும் ஆர்வமும், ஒவ்வொரு இந்தியருக்கும் உதவேகத்தை அளிக்கும். உங்கள் முயற்சி மேலும் பல இந்திய விண்வெளி பயணங்களுக்கு அடித்தளமாக அமையும்” என பாராட்டியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்