Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை கட்டி தழுவி ஆறுதல் கூறினார் மோடி

செப்டம்பர் 07, 2019 07:17

பெங்களூரு: சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பை வெகுவாக பாராட்டி பேசினார்.

பிரதமர் மோடி கூறுகையில், ‘நானும், நாடும் உங்களுடனே இருக்கிறோம். குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ, அவ்வளவு நெருங்கியுள்ளீர்கள். நாட்டின் வளர்ச்சிக்காக நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றியுள்ளீர்கள்.

நாட்டுக்காக வாழ்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இவர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது. நமது தாய்நாட்டிற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கமின்றி இரவு பகலாக உழைத்து வருகின்றனர்’ என கூறி அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி உரையாற்றும்போது அங்கிருந்த பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டனர். இந்நிலையில் பிரதமர் மோடி உரையாற்றிவிட்டு சென்றபோது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் மல்க அழுதார். இதையடுத்து பிரதமர் மோடி சிறிது நேரம் சிவனை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.

தலைப்புச்செய்திகள்