Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செப்டம்பர் 10, 2019 07:20

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:- மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அடக்கிட, திருமால் வாமன அவதாரம் எடுத்து, அச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலத்தை தானமாக கேட்க, அதற்கு மகாபலி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, பாதாள உலகிற்கு தள்ளினார்.

பாதாள உலகிற்கு செல்லும் முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை தன்னுடைய மக்களை காண வேண்டும் என்ற மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுதலை திருமால் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மகாபலி சக்கரவர்த்தி மக்களை காண வரும் தினமே திருவோணத் திருநாளாக மலையாள மக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த இனிய நாளில், அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சாதி, மத, பேதங்களை களைந்து, ஒற்றுமையாக இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்