Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்ஷா

செப்டம்பர் 14, 2019 05:42

புதுடெல்லி: இந்தி தினத்தையொட்டி பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் நாட்டின் அடையாளத்தின் அடையாளமாக மாறும் பொதுவான மொழியைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்று, ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றால், அது பரவலாக பேசப்படும் இந்தி மொழியாகும். "  

அவரவர் தாய்மொழியிலேயே பேசும் போதும் மக்கள் தங்கள் மொழியுடன் இந்தியையும் பழக வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும்.

இந்தியை அடிக்கடி பயன்படுத்தும்படி மக்களை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், 'ஒரே தேசம், ஒரே மொழி' என்ற மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேலின் கனவை நிறைவேற்றுவதில் பங்களிப்பு செய்யுங்கள் என கூறி உள்ளார். 

தலைப்புச்செய்திகள்