Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாக்டர் என ஏமாற்றி இளம்பெண்ணை திருமணம் செய்த நபர் கைது

செப்டம்பர் 14, 2019 07:04

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் 34 வயதான கார்த்திக். இவர் தான் ஒரு எம்பிபிஎஸ் படிப்பு முடித்த டாக்டர் என பொய் சொல்லி, மாதவரத்தை சேர்ந்த பிகாம் பட்டதாரியான 26 வயது இளம்பெண்ணுடன் நிச்சயம் செய்துள்ளார். பெண் வீட்டாரும் கார்த்திக் கூறியதை நம்பி, அவருக்கு 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 11-ம் தேதி கொளத்தூரில் உள்ள ஒரு அம்மன் கோவிலில் திருமணமும் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், மாதவரத்தில் ஒரு மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை புதுமணத் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, உறவினர் ஒருவர் பெண்வீட்டாரை அணுகி, கார்த்திக் உண்மையிலேயே எம்பிபிஸ் படித்த டாக்டரல்ல எனவும் இதுகுறித்து முழுமையாக விசாரித்துக் கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்து கார்த்திக்கிடம் விசாரித்தனர். அப்போதுதான் அவர் உண்மையான டாக்டரல்ல என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாதவரம் போலீசாரிடம் பெண் வீட்டார் புகாரளித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை நட த்தினர். அதில் அவர் தான் பொய்சொல்லி திருமணம் செய்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் டாக்டர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சொகுசு காரில் அவர் வலம் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது, மேலும் வேறு யார் யாரை கார்த்திக் ஏமாற்றினார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தலைப்புச்செய்திகள்