Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது எனவே ஆறு மொழிகள் படித்தாக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

செப்டம்பர் 15, 2019 09:21

சென்னை: சென்னை கமலாலயத்தில் காந்தியடிகள் 150-ம் ஆண்டு பாதயாத்திரை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘இந்திய திருநாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், தேசபிதா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் விழிப்புணர்வு யாத்திரையை நடத்த திட்டமிட்டுளோம்.

இதை பாஜகவினர் அனைவரும் முன்னெடுத்துச் செல்வார்கள். ஒரு நாளுக்கு 10 கிலோமீட்டர் பயணம் வீதம், 15 நாட்கள் பாதயாத்திரை நடைபெறும்.

வாரத்தில் ஒரு நாளாவது கதர் ஆடை அனைவரும் அணிய வேண்டும். நீர் மேலாண்மை முக்கியமான பிரச்னையாக இருக்கிறது. மழை நீரை சேகரிப்பது ஆகியவை இந்த யாத்திரையின் நோக்கம். காந்தி பிறந்தநாள் அன்று யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் யாத்திரை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக அரசு குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில பாஜக தலைவர் பற்றிய முடிவை தலைமை எடுக்கும். மோடி ஆட்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த 100 நாட்களில் ஏற்படுத்தியுள்ளார். உலகில் பழைமையான மொழி தமிழ் என்றும் சமஸ்கிரத்தை விட பழைமையான மொழி தமிழ் என மோடி கூறியுள்ளார்.

கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தின் மீது என்பது போல, தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள்.

இந்தி திணிப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என கூறினார்.

தலைப்புச்செய்திகள்