Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

களைகட்டிய காங்கேயம் சந்தை; கம்பீரமாக காட்சியளித்த காளைகள்

செப்டம்பர் 16, 2019 07:03

காங்கேயம்: நாட்டு இன காளைகளை பாதுகாக்கும் வகையில், காங்கேயத்தில் நடைபெற்ற காளை சந்தையில் ஏராளமானோர் ஆர்வத்துடன் காளைகளை வாங்கிச் சென்றனர். 

வீரத்துக்கு பேர் போன காங்கேயம் காளைகள், நாட்டு இன மாடுகள் ரகங்களில் முக்கியமான ஒன்று. இவ்வகை காளைகளை பாதுகாக்கும் நோக்கில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பழையகோட்டையில் காளை சந்தை நடைபெற்றது. கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் கொங்கு கோசாலை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சந்தையில், காங்கேயம் காளைகள் கம்பீரத்துடன் காட்சியளித்தன.

காளை சந்தை தொடங்கி வைத்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி,

நாட்டு இன காளைகளின் தேவைகள் அதிகரித்துள்ளதாகவும், நாட்டின மாடுகளால் விவசாயிகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,  வலியுறுத்தினார்.
 
இந்த காளை சந்தையில் இடைத்தரகர்கள் பங்கேற்கவில்லை என்பதால், நியாயமான முறையில் மாடுகளை விற்க முடிவதாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். சந்தையின் ஒருபகுதியாக காளைகளுக்கு கட்டப்படும் மணிகள், கயிறுகளும் விற்பனை செய்யப்பட்டன. காளை சந்தைகள் மூலமாக  நாட்டு இன காளைகள் பாதுகாக்கப்படுவதுடன், அவை குறித்து  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்பதே நாட்டின மாடு ஆர்வலர்களின் கருத்தாகும். 

தலைப்புச்செய்திகள்