Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: மாமல்லபுரம் டூ ஆஸ்கர் - 9 வயது சிறுமியின் கதை

செப்டம்பர் 16, 2019 03:04

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள மீனவக் குடியிருப்பைச் சேர்ந்தவர் கமலி. ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவர் அந்த பகுதியில் ஸ்கேட் போர்டிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒரே பெண் குழந்தை.

கமலி, தன் தம்பிக்கு  ஸ்கேடி போர்டிங் சொல்லி தருகிறார். அவனுக்கு மட்டுமல்ல அங்கு நிறையப் பேர் வருவார்கள், அவர்களுக்கும் அவர் தான் சொல்லிக் கொடுக்கிறார். தனது ஐந்து வயதிலிருந்து ஸ்கேடிங் போர்டிங்கில் ஈடுபட்டு வரும் கமலி தனக்கு சர்ஃபிங் மற்றும் ரன்னிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்கேட் போர்டிங்கில் இதுவரை விரல்விட்டு எண்ண முடியாத பரிசுகளை வாங்கியுள்ளார்.

கமலியின் இந்த திறமைகள் குறித்து அவரின் தாய் சுகந்தி கூறும்போது, "கமலி இந்த விளையாட்டில் ஈடுபடும்போது பெண் குழந்தைக்கு எதற்கு இதெல்லாம் என்று எல்லாரும் கேட்டார்கள் ஆனால் இப்போது அதே பெற்றோர்கள் என் குழந்தைக்கும் சொல்லிக் கொடுக்கச் சொல் என்கிறார்கள் அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது." என்கிறார் முகத்தில் பெருமையுடன்.

மேலும், மாமல்லபுரத்தில் மீன் பஜ்ஜிக் கடை நடத்திக் கொண்டு தனது பெற்றோர்களின் உதவியுடன் தனது குழந்தைகளை வளர்த்துவரும் சுகந்தி, "எனது எந்த ஒரு விருப்பமும் இதுவரை நிறைவேறியதில்லை ஆனால் எனது குழந்தைகளின் கனவை நிறைவேற்றுவதே எனது விருப்பம்," என்று தெரிவிக்கிறார்.

இவர் குறித்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்